10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப்பிரிவினருக்கு 10% கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்று குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது.
எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு:
ஜனவரி 18 ஆம் தேதி பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்தது. திமுக முதன்மைச் செயலர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு:
இந்நிலையில் இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் மத்திய அரசு வாதத்தில் ,திமுக அரசியல் நோக்கத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளது.ஆர்எஸ் பாரதி நேரடியாக பாதிக்கப்படவில்லை, என்பதால் அவரால் பொதுநல வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…