BREAKING :டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 10 பேரிடம் விசாரணை.!
- 2 வட்டாட்சியர்கள் உட்பட 10 பேரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை கடலூரில் ராஜசேகரன் என்ற இடைத்தரகரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்து உள்ளது. இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக நேற்று காலை 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.
இந்த 12 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படை எஸ்.பிக்கள் அமைத்து தனித்தனியாக விசாரித்து வந்த நிலையில் நேற்று 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இடைத்தரகர் எனவும் கூறப்படுகிறது.
நேற்று சிவகங்கையில் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து மொத்தம் 10 பேரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 2 வட்டாட்சியர்கள் அடங்குவார்கள். நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரை சிபிசிஐடி போலீசார் எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து பிப்ரவரி 07-ம் தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கடலூரில் ராஜசேகரன் என்ற இடைத்தரகரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.