10 % இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது…?? மாநிலங்கவையில் கனிமொழி காட்டமாக விளாசல்.!!
10 % இடஒதுக்கீடு மசோதா நேற்று இரவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் இந்த மசோதாவிற்கு நாடும் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவை எதிர்த்து மாநிலங்கவைக்கான திமுக எம்பி கனிமொழி பல்வேறு கேள்விகளை விளாசியுள்ளார்.
இது குறித்து விளாசுகையில் ஒருவர் மதத்தை மாற்றலாம்,பொருளாதாரத்தை மாற்றலாம் சாதியை மாற்ற முடியாது.இன்றும் நாட்டில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது.ஒரே நாள் இரவில் முடிவு செய்து, 10 % இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 10 % இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்வுக்குழு மசோதாவிற்கு அனுப்ப வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார்.