தமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.!
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 8 பேரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் கொரோன அறிகுறியுடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர், அவரது குழந்தை, அவரது தாய், வீட்டு பெண் உதவியாளர் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆகியோருக்கு கொரோனா தொற்றியதாக கூறப்படுகிறது. இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 170000 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 4000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.