10 நிமிட மகிழ்ச்சியான வகுப்புகள்… மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா.! அசத்தல் அறிவிப்பு கொடுத்த மேயர் பிரியா.!
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா.
அதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 11 -ஆம் வகுப்பில் உள்ள மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு Career Guidance Programme நடத்தப்படும்.
இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு இசைக்கருவிகள் வாங்க ஒரு பள்ளிக்கு ரூ.25,000 வழங்கப்படும். 1.35 லட்சம் ஏழை மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்துவதைத் தடுக்க மாநகராட்சி ஆலோசகர்களை நியமிக்கும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் மகிழ்ச்சியான வகுப்புகள் (Happy Class) நடத்தப்படும். அதில் நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும்” என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.