10 நிமிட உணவு டெலிவரி – சொமேட்டோவிடம் விளக்கம் கேட்க முடிவு!
10 நிமிட உணவு டெலிவரி குறித்து சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க போக்குவரத்துக்கு போலீசார் முடிவு.
10 நிமிடத்தில் உணவு டெலிவரி என அறிவித்த சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு எடுத்துள்ளனர். zomato திட்டத்தால் சாலை விபத்து ஏற்படலாம் என்பதால் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சொமேட்டோவின் அறிவிப்புக்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், விளக்கம் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதால் சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும் என்றும் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாலும் சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்படவுள்ளது. உணவு விநியோக சேவை நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Wohoo! Zomato Instant is here to deliver your food in just 10 minutes – without any risks or penalties for the delivery partners.
Read more about Zomato Instant here: https://t.co/pbr9ySCJ9Z https://t.co/Q82FgOcks4
— zomato (@zomato) March 21, 2022