#Breaking: அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 10 அமைச்சர்கள் பின்னடைவு!
அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் அமைச்சர்களாக இருந்த பாண்டியராஜன், ஜெயக்குமார் ஆகிய 10 அமைச்சர்கள் பின்னடைவில் உள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நிலையில், தற்பொழுது வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி இதுவரை 148 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதனைதொடர்ந்து அதிமுக, 85 இடங்களில் முன்னணியில் உள்ளது.
அந்தவகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் அமைச்சர்களாக இருந்த பாண்டியராஜன், ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி, எம்.ஆர்.விஜயபாஸ்கரன், எம்.சி.சம்பத், சரோஜா, ராஜேந்திர பாலாஜி, சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி ஆகிய அமைச்சர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவில் உள்ளனர்.
இராயபுரம்:
சென்னை, இராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், 7,519 வாக்குகள் பெற்று, 4,178 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தீமுக் வேட்பாளரான இரா.மூர்த்தி, 11,697 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் தொகுதியில் 16,375 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான ஆர்.லட்சுமணன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து நின்ற அமைச்சர் சி.வி.சண்முகம், 15,621 வாக்குகள் பெற்று 754 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
கடலூர்:
கடலூர் தொகுதியில் அமைச்சர் சம்பத் 40,095 வாக்குகள் பெற்று 2,819 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் கோ.அய்யப்பன், 42,914 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கரூர்:
கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரன், 16,215 வாக்குகள் பெற்று 2,079 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். அவருக்கு எதிராக களம்கண்ட திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, 18,294 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன் கோவில் தொகுதியில் அமைச்சர் வீ.எம்.ராஜலட்சுமி 20,741 வாக்குகள் பெற்று, 3,322 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈ.ராஜா, 24,063 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் பா.வளர்மதி 6,399 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தா.மோ.அன்பழகன், 17,744 வாக்குகள் பெற்றுள்ளார்.
ராசிபுரம்:
ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா, 43,531 வாக்குகள் பெற்று, 1,622 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் மதிவேந்தன், 45,153 வாக்குகள் பெற்றுள்ளார்,
திருச்சி கிழக்கு:
திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் என்.நடராஜன் போட்டியிட்ட நிலையில், அவர் 13,796 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். அவரை எதிர்த்து களம்கண்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், 30,374 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஆவடி:
சென்னை ஆவடி தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 44,486 வாக்குகள் பெற்ற நிலையில், 27,277 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சாமு.நாசர் முன்னிலையில் உள்ளார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி , பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கபாண்டியன், காலை முதலே முன்னிலையில் உள்ளார்.