கஜா புயலால் உயிரிழந்த கூலி தொழிலாளி குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்…!!
தஞ்சையில் கஜா புயலால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு ஆளான தஞ்சை மாவட்டம் சின்னாபின்னமாக மாறியது,இன்று வரை மக்கள் நிவாரணங்களை நம்பி இருக்கும் அவ நிலையை கஜா புயல் ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.கஜா புயலின் கொடூர தாக்கத்தால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் தங்களின் முழு வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.அவர்களுக்கு பல பகுதியில் இருந்து நிவாரணப் பொருட்கள், நிதியுதவி என நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கஜா புயல் தாக்குதலால் சாந்தாகாடு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் கோழி பண்ணை இடிந்து விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தபார்த்திபனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.இந்த நிவாரண தொகையை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் பார்த்திபனின் பெற்றோர் பெரியசாமி-வீரம்மாளிடம் வழங்கினார்.