10 லட்சம் பனை விதைகள் நடும் விழா – துவக்கி வைத்தார் சீமான்!

Default Image

நாம் தமிழர் கட்சி சார்பில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார் சீமான்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதிலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு நாம் தமிழர் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே போல லட்சக்கணக்கில் பனவிதைகளை இவர்கள் நட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டும் அதன் தொடர்ச்சியாக பனை விதை நடும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பத்தூர் தொகுதியில் இன்று இந்த பனை விதை நடும் விழாவை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று ஒரே நாளில் 10 லட்சம் பண விதைகளை நடவு செய்து வரும் நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். அம்பத்தூர் தொகுதியை சேர்ந்த சதாக்குளம் பகுதியில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் திருவிழாவை தொடங்கி வைத்ததகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் ரஜினி அண்மையில் வேறு ஒருவரை தான் முதல்வராக, வேட்பாளராக அறிவிப்பேன் என அவர் கூறியதற்கு, புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வந்த ரஜினியால் நாங்கள் சந்திக்க கூடிய அவச்சொற்களை சந்திக்க முடியாது எனவும், ரஜினி இவ்வாறு கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்