திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில் காங்கேயம் இடத்தில சோதனைச்சாவடியில் நேற்று நள்ளிரவில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் சென்றது. அப்பொழுது காங்கேயம் அடுத்த, திட்டுப்பாறை சோதனைச்சாவடியில் அந்த லாரியை மடக்கிப் பிடிக்க அங்கிருந்த போலீசார் முயற்சித்தனர். அங்கும் அந்த லாரி நிற்காமல் சென்றது.
இதனால் போலீசார் சந்தேகமடைந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஆயுதப்படை காவலர் பிரபு என்பவர் லாரியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். அப்போது அந்த லாரியை முந்திச் செல்ல முயன்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குளானது. இதில் சம்பவ இடத்திலே காவலர் பிரபு உயிரிழந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் பணியின் போது லாரி மோதி உயிரிழந்த ஆயுதப்படை காவலர் பிரபுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் பழனிசாமி தெரிவித்து, அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…