மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்த விசாரணை நிறைவடைந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நேற்றும், இன்றும் விசாரணை மேற்கொண்டது. நேற்று சசிகலாவிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இரண்டு நாட்களாக 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த விசாரணை நிறைவடைந்துள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் துருவி, துருவி கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெற்று கொண்டனர்.
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…