சென்னையில் கனமழை.. திருப்பிவிடப்பட்ட 10 விமானங்கள்… காலதாமதமாகும் 9 விமானங்கள்…

கனமழை காரணமாக சென்னையில் 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் இத்தனை நாள் வாட்டி வதைத்து வந்த கோடை வெப்பத்தில் இருந்து சற்று குளிர்ச்சி கிடைத்ததாக மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர். இருந்தாலும் சென்னையில் ஓரிரு இடங்களில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஏற்கனவே ,சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தற்போது வெளியான தகவலின்படி, சென்னையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 10 விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. குறிப்பாக துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உளிட்ட நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்தன. அதன் பிறகு தான் பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக தாமதமாக புறப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025