திடீரென்று வகுப்பறையில் ஏற்பட்ட 10 அடி ஆழம் கொண்ட பள்ளம்..! மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்..!
சொரக்காய்ப்பேட்டை அரசுப்பள்ளியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கட்டடங்கள் உருகுலைந்த நிலையில், வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சமீப நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்த ஆற்றிற்கு அருகாமையில் இருந்த சொரக்காய்ப்பேட்டை அரசுப்பள்ளியில் மண் அரிப்பு ஏற்பட்டு, கட்டடங்கள் உருகுலைந்தது. இதனால் அப்பள்ளி வகுப்பறையில் திடீரென 10 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இப்பள்ளம், மண் அரிப்பு காரணமாக தான் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.