சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற 10 பேர் வீடு திரும்பினார்!
சிவகங்கை அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
தமிழகத்திலும், இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இந்த வைரஸ் பாதித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகிற நிலையில், சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 வயது சிறுமி உட்பட 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.