எம்.எல்.ஏக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைப்பு..!
எம்.எல்.ஏக்களின் 10 முக்கிய கோரிக்கைகளை, செயல்படுத்த 10 குழுக்கள் அமைத்து உத்தரவு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தங்களது தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை, அந்தந்த ஆட்சியர்களிடம் மனுவாக அளிக்குமாறு தெரிவித்திருந்தார்.
அதன்படி அனைத்து தொகுதி எம்எல்ஏ-க்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் எம்எல்ஏக்களால் அளித்த 10 கோரிக்கைகளை முன்னுரிமையில் நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பேரில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து திட்ட மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.