வீட்டுவசதி வாரிய பணியாளர்களுக்கு 10% போனஸ் – அரசாணை வெளியீடு

Default Image

வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு’ 2020-2021ஆம் ஆண்டிற்கான. 20212022 ஆண்டில் வழங்கப்படக்கூடிய மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டன.

2 இவ்வரசாணை நேரடியாக பொருந்தாவிடினும். இதனை பின்பற்றி மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி) அவர்கள் போனஸ் சட்டத்தின்கீழ் வரும் முதன்மை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மற்றும் போனஸ் சட்டத்தின்கீழ் வராத சங்கங்களில் பணியாற்றும் 1036 பணியாளர்களுக்கு, அந்தந்த சங்கங்கங்களின் நிதியிலிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகையாக (Ex-gratia) ரூ.37,98,717/ஐ வழங்குவதற்கு ஆணை வழங்கிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டார்.

3 கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (வீட்டுவசதி அவர்களின் மேற்கண்ட கருத்துருவினை அரசு கவனமாக ஆய்வு செய்தது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
ManoThangaraj
putin
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji