வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு – முதலமைச்சர் ஆலோசனை!
10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, ஆர்எஸ் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், என்ஆர் இளங்கோ, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். 10.5% வன்னியர் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், ஆலோசனை நடைபெற்றது.
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான மேல்நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது. pic.twitter.com/IpHQFpx5nC
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 14, 2022