வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து…! சாலைமறியலில் ஈடுபட்ட பாமகவினர்…!

Default Image

சென்னை மாமல்லபுரத்தில், வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்தனர்.

முறையான சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற என மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர்  தீர்ப்பளித்துள்ளனர்.

இதனையடுத்து, சென்னை மாமல்லபுரத்தில், வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தீர்ப்பால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்