வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்.!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததை அடுத்து, சட்ட மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உல் ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியிருந்தார்.
இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.இதனிடையே, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.