வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடு என்று துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என்பது பாமகவின் நெடுநாள் கோரிக்கையாக இருந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு மசோதா கடந்த தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு இறுதியானது அல்ல, தற்காலிகமானது என்றும் 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் கணக்கெடுப்பு அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியிருப்பது தேர்தலுக்கான நோக்கம் என்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி ஒதுக்கீடு அளிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பியிருந்தன. அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல்வேறு பிரச்சனைகள் கிளம்பியது.
இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்.பி.சிக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இடைக்கால ஏற்பாடு, இறுதியானது அல்ல, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு நிரந்தரமான உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
துபாய் : பிரிட்டனைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா என்கிற 18 வயதுடைய சிறுவன், பள்ளி விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு…
துபாய் : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல்…
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…