ஜூலை 2வது வாரத்தில் 10, 11, +2 தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்.!
தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் – அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சத்தியம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சிலரை தவிர 10-ம் வகுப்பு மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்ளை தேர்வு மையத்துக்கு வேனில் அழைத்து வரப்படுவர் எனவும் கூறியுள்ளார்.
தேர்வு அறையில் தனியாக தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பு நடத்தாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.