லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்,மதுரையில் பேட்ஜ் உரிமம் வழங்கியதில் 10 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை வடக்கு, மதுரை மத்தி, மதுரை தெற்கு என மதுரை மாவட்டத்தில் 7 வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டில் பணம் வாங்கிக் கொண்டு ஏராளமானோருக்கு வாடகை வாகனங்கள் ஓட்டுவதற்கான பேட்ஜ் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், தணிக்கையிலும் ஈடுபட்டனர். அப்போது வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலியான பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு 6 ஆயிரத்து 777 பேருக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக ஒவ்வொருவரிடமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை என 10 கோடியே 16 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று உள்ளது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அப்போதைய மதுரை வடக்கு போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் உள்ளிட்ட 6 வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் 11 ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் என மொத்தமாக 17 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…