10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கையை மறுக்கக்கூடாது!மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை
10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் சேர்க்கையை மறுக்கக்கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கட்டாய மாற்றுச்சான்றிதழும் தரக்கூடாது .11ம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களை 12ம் வகுப்பில் பயில அனுமதித்து சிறப்புப்பயிற்சி அளிக்க வேண்டும் .குறைந்த மதிப்பெண் எடுத்த, தோல்வியுற்ற மாணவர்களை ஊக்குவித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் ர்ன்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.