10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை http://www.dge.tn.nic.in http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த மார்ச்சில் (16.3.18) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பமாகியது.ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைப்பெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 10,01,140 மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து மொத்தம் 50,756 மாணவ, மாணவிகளும், புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 17,514 பேரும் தேர்வு எழுதினர்.
இதற்காக தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வில், முறைகேடுகளை தடுக்க, தமிழகம் முழுவதும், 6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.