வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.அதில் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சந்தித்தார்.அதில் அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வாக்களிக்க பணம் கொடுத்ததாக 833 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 37 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…