மண்டபத்தை இடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலி.! ஐந்து பெண்கள் படுகாயம்..!

Published by
பாலா கலியமூர்த்தி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திருமண மண்டப கட்டிடம் இடிந்து விழுந்ததால் அருகே உள்ள குடியிருப்புகளில் வசித்த ஒரு பெண் பலி, ஐந்து பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிவகாசி வள்ளலார் தெருவில் அரசன் கணேசன் என்ற தனியாருக்குச் சொந்தமான திருமண மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் பின் பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்டபத்தை புதுப்பிப்பதற்காக இடித்த போது அருகிலுள்ள குடியிருப்பின் மீது விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் பக்கத்தில் இருந்த வீடுகளின் மீதும் சாய்ந்தால் 55 வயதான கன்னியம்மாள் என்பவர் இடிபாட்டில் மாட்டிக்கொண்டு உயிர் இழந்தார். மற்றும் மண்டபத்துக்கு அருகே இருந்த சில வீடுகளும் சேதமடைந்தன. இதில் ஞான நாகம்மாள், அங்கம்மாள், சண்முகத்தாய், ஈஸ்வரி,நிஷா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் நாகம்மாள் என்பவருக்கு இரு கால்களும் உடைந்து படுகாயம் அடைந்தாளால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தென்மண்டல டிஐஜி ஆனி விஜயா, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் சரவண குமார், ஆட்சியர் தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுச் செய்தனர்.
விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பகொட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

2 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

3 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

5 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

6 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

6 hours ago