ஒரு கிலோ 1 ரூபாய்…! மீனுக்கு உணவாகும் முள்ளங்கிகள்…விவசாயிகள் கடும் வேதனை.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ முள்ளங்கி ஒரு ரூபாய்க்கு விற்க போடுவதால் விவசாயிகள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரம் பகுதிகளில் முள்ளங்கியின் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. முள்ளங்கி விளைச்சல் நிலங்களுக்குள் வியாபாரிகள் யாரும் முன்வராத காரணத்தினால் பல விவசாய நிலங்களில் முள்ளங்கி பறிக்காமல் விளைநிலங்களிலே அப்படியே இருக்கின்றது.
இதனை அறிந்த அப்பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள ஒருவர் அங்கிருந்த விவசாயிகள் அணுகி1 கிலோ முள்ளங்கி 1 ரூபாய்க்கு பேசி டிராக்டரில் மூலம் முழங்கியை ஏற்றி அங்கிருந்து ஓடையில் மீன்களுக்கு உணவாக கொடுத்துள்ளார்.
விவசாய நிலத்தில் வீணாக போகும் முள்ளங்கியை வேறு வழியின்றி கிலோ 1 ரூபாய்க்கு விவசாயிகள் கொடுத்து வருகின்றனர். கோச்சபள்ளியில் இருந்து ஒரு கிலோவிற்கு வாங்கும் அந்த முள்ளங்கிகள் சென்னையில் 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதை போல், ஆன்லைனில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.