’35 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல்’ நான் தருகின்றேன்..!!
அரசாங்கம் அனுமதித்தால், இந்தியா முழுவதும் 1 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை ரூ.35 முதல் ரூ.45 வரை வழங்கத் தயாராக இருப்பதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர் டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாபா ராம்தேவ்,கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்குப் பின்னணியில் சில முக்கிய காரணிகள் உள்ளன. வாகன ஓட்டிகளின் சுமைகளைக் குறைக்க, “மத்திய அரசு எனக்கு அனுமதியளித்து, வரிச்சலுகையும் கொடுத்தால் பெட்ரோல், டீசலை 35 முதல் 40 ரூபாய் அளவில் இந்தியா முழுவதும் விற்பனை செய்வேன்” என்றார். பெட்ரோல். டீசலை ஜிஎஸ்டி-யின் அதிகபட்ச அளவான 28%-ல் இல்லாமல் குறைவான வரிவரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இவர் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசை விமர்சித்தார் அப்போது அவர் ,
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டேன். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் அரசை பலரும் பாராட்டி வருகின்றனர் என்றாலும் ஒரு சில விஷயங்களில் சரிசெய்ய வேண்டியது உள்ளது. அரசை விமர்சிப்பது அடிப்படை உரிமை என்றாலும் பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
DINASUVADU