கரூரில் உள்ள வள்ளுவன் பெட்ரோல் பங்கில் 20 திருக்குறள் சொன்னால் பொங்கல் திருநாள் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 31 வரை 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் குவிந்து வருகிறது.
தமிழின் பெருமை நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், கற்றறிந்தவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுவதற்காகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சில சான்றோர்கள் போட்டிகள் நடத்துவது போல தமிழுணர்வை ஊக்குவிப்பது சில நேரங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அது போல கரூரை சேர்ந்த செங்குட்டுவன் எனும் எம்.காம் பட்டதாரி ஒருவர் திருக்குறள் மீதுள்ள ஆர்வத்தால் ஏற்கனவே, வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் பிங் ஆகியவற்றை நடத்தி வருகிறாராம். இந்நிலையில், தனது பெட்ரோல் பங்கில் தமிழர் திருநாளான ஜனவரி 15 முதல் ஏப்ரில் 31 வரை போட்டி ஒன்றை நடத்துகிறார். அதாவது, 20 திருக்குறளை கூறுபவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாம். இவரது இந்த செயலால் கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அவரது வள்ளுவர் பெட்ரோல் பங்கில் கூட்டம் அலைமோதுகிறதாம்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…