சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் பேர் விண்ணப்பம்.!
தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.
தமிழகத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல 1 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் இணையதளம் பக்கத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்ப ரயில்வே துறையுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் வெளிமாநில சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் கடந்த 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.