தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி!
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
தமிழகத்தில் எதிர்பாராமலோ அல்லது விபத்திலோ பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்த சுப்புராயன், ஈரோடு மாவட்டத்தில் தேனீ கொட்டி உயிரிழந்த கந்தசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த இயேசுதாஸ், கிள்ளியூர் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனுக்கு, கிள்ளியூர் கிராமத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிபு , தோமா என்பவருக்கு என்பவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த கலாநிதிமாறன் எனும் சிறுவனுக்கு
தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கரும்பாயிரம் என்பவருக்கு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலில் தவறி விழுந்த பாஸ்கர் என்னும் இளைஞனுக்கு, கடலூர் மாவட்டத்தில் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்த பாரதிக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த ராமச்சந்திரன் என்பவருக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்த சிறுவர்கள் செல்வன் மற்றும் ஜெகப்ரியன், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜீவானந்தம் என 25 பேருக்கு இந்த ஒரு லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.