சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி!
ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள புதுவலசு எனும் இடத்தில் கடந்த 3- ஆம் தேதி சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மோகம்புரி, அவருடைய மனைவி திருமதி பொங்கி அம்மான், சின்னுசாமி என்பவரின் மகள் பாலசுப்ரமணி மற்றும் பொன்னுசாமி என்பவரின் மனைவி பார்த்தாள் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் பழனிசாமி#EdappadiPalaniswami | #erode pic.twitter.com/1mFQIjeYLv
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 4, 2020
அந்த அறிக்கையில், உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.