“1 கிலோ கேக்குக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்”அசத்திய “பேக்கரி கடை சிக்கியது” சர்ச்சையில்…!!

Default Image

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை சமாளிக்க ஏதுவாக ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று வேலூரில் உள்ள பேக்கரி கடை நிர்வாகம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தினம் ஏறிக் கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலை இதனை காரணம் காட்டி பல்வேறு பொருட்களின் விலையும் சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு வருகின்றது.

அண்மையில் திருமண வீடு ஒன்றில் மணமக்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை அந்த ஊர்மக்கள் நாசுக்காக சாடினர்.

Related image

இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வை வைத்து தனது கடைக்கு விளம்பரம் தேட திட்டமிட்ட வேலூரை சேர்ந்த பேக்கரி கடைக்காரர் ஒருவர் தங்கள் கடையில் ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து கடை வாசலில் பெரிய அளவில் பேனர் ஒன்று வைத்துள்ளார்.

இதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க் உடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட அவர், கடையில் இருந்து வாடிக்கையாளர் கொண்டு வரும் ஒரு கூப்பனுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்க அறிவுறுத்தினர்.

விளம்பரத்தை பார்த்து பேக்கரிக்கு சென்ற இரு வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கூப்பன் வழங்கப்பட்டது. பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் தகவல் வாட்ஸ் ஆப், முக நூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியதால், இந்த இலவச அறிவிப்பு மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி அரசியல் பிரமுகர்கள் சிலர் மூலம் பெட்ரோல் பங்கிற்கு அழுத்தம் தந்ததாக கூறப்படுகின்றது.

Image result for PETROL

இதையடுத்து பேக்கரி கடையில் கொடுக்கப்படும் பெட்ரோல் கூப்பனுக்கு, பெட்ரோல் இலவசமாக வழங்க இயலாது என்று பங்கில் அறிவித்தனர். இருந்தாலும் பேக்கரிகடைக்காரர் தாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு உரிய பணம் கழித்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார் ஆனாலும் தங்கள் கடைக்கு கேக் வாங்க ஆட்கள் வரவில்லை..! என்று ஏமாற்றத்துடன் தெரிவித்தார் கடையின் உரிமையாளர் கனகராஜ்

Related image

தரமான பொருட்களுக்கு இலவசம் தேவையில்லை, அதே நேரத்தில் தேவையில்லாமல் தொடர்பில்லாத பொருட்களை இலவசம் தருவதாக விளம்பரம் செய்தால் அது சர்ச்சைக்குரிய விவகாரமாகிவிடும் என்பதற்கு சான்றாக மாறி உள்ளது இந்த சம்பவம்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்