சென்னையில் 1.8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..!

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சென்னை வந்த 2 பேர் கடத்திய 1.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். தங்கம் கடத்திய முகமது அஸ்ரப், முகமது இப்ராஹிம் ஆகியோரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் முகமது அஸ்ரப் தனது இரு கால்களிலும் பேண்டேஜ் துணியால் கட்டித் தங்கத்தை கடத்தியது அம்பலமானது.