ஒகேனக்கல்லில் நீர்வரத்து ஒரு வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி.!
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஒரு வினாடிக்கு 1.50 லட்சம் கனஅடி ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.