தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடைக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதோ அல்லது விநாயகர் சிலைகளை பார்வாயாக எடுத்துச் செல்தோ, சிலைகளை கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை என்று நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது. இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர்.
இந்நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள கொராணா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 5-ஆம் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.
மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை தான், நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அதற்காகவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும், அதே சமயம் ஆன்மீக சூழ்நிலையிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறது.தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்துனை ஆர்வம் காட்டியது, உச்சநீதி மன்றம் வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவர்.
மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது, அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்துள்ளது வேதனையானது. விநாயகரிடம் விளையாடிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிலை என்னவானது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்தும், நாகூர் தர்கா விழாவிற்கு 40 கிலோ சந்தனமும் கொடுத்தது தமிழக அரசு. தூத்துக்குடி பனிமய மாதா விழா குறித்து பாதிரியார் பேட்டி தர மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவு கொடுக்க வைத்தது தமிழக அரசு ஆனால், இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதை இந்துக்கள் அறிவர்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் , தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை இலட்சம் இடங்களில் திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்து முன்னணி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…