நான் முதல்வன் திட்டம்.. 1.43 லட்சம் மாணவர்களுக்கு வேலை கிடைத்தது.! திட்டக்குழு அறிவிப்பு.!

Naan mudhalvan scheme

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1.43 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். 

மாணவர்கள் படிக்கும்போதே அவர்கள் துறை சார்ந்த திறன் பயிற்சி அளித்து, அதன் மூலம் வேலை வாய்ப்பை பெறுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த திட்டம் தான் ‘நான் முதல்வன் திட்டம்’. இந்த திட்டம் துவங்கியதில் இருந்து ஓர் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

முதலில் பொறியியல் கல்லூரிகளில் துவங்கப்பட்ட இந்த திட்டம் அடுத்ததாக அரசு கலைக்கல்லூரி, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ தொழிற்பயிற்சி மையங்கள் என அனைத்திலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க கூடிய திறன் சார்ந்த மேம்பாட்டு பயிற்சிகளை அந்தந்த கல்வி வளாகங்களில் வழங்கி வருகிறது.

இந்த நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற 64,943 பொறியியல் மாணவர்கள் பணி நியமன ஆணை பெற்றதாகவும், அதேபோல் 78,196 கலை அறிவியல் மாணவர்கள் நேர்காணலில் பணி நியமன ஆணை பெற்றதாகவும் என மொத்தமாக 1.43 லட்சம் மாணவர்கள் பயனாடைந்ததாகவும் நான் முதல்வன் திட்ட குழு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்