கஜா புயலால் பெரும் சேதம் …!1.27 லட்சம் மரங்கள்,105 துணை மின்நிலையங்கள் சேதம்…!முதலமைச்சர் பழனிச்சாமி
கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சேதம், சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.கஜா புயலால் 105 துணை மின்நிலையங்கள் சேதமடைந்துள்ளது, சீரமைப்பு பணிகளில் 10 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நோய் பரவாமல் தடுக்க ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்து தரப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.