BREAKING:+1,+2 பொது தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்க அறிவுறுத்தல்.!
கொரோனாவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குறைவான பேருந்துகள் இயங்குவதால் +1,+2 மாணவர்கள் குறித்த நேரத்தில் பொதுத்தேர்வுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது +1,+2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.