வரலாற்றில் இன்று – நவம்பர் 1, 1986 தமிழ்நாடு சட்ட மன்றத்தின் மேலவை கலைக்கப்பட்டது
அறிஞர் அண்ணா முதலமைச்சர் பதவி வகித்தபோது,அவரும் சட்ட மன்றத்தின் மேலவை உறுப்பினராகத்தான் இருந்தார். எம்ஜியார் முதலமைச்சராக இருந்த போது திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு ஆளுனர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் கேட்டார். இதனால் கோபம் கொண்ட எம்ஜியார் மேலவையைக் கலைக்க உத்தரவிட்டார். சட்டமன்ற மேலவையை கலைக்க மே 14 ஆம் தேதி கீழவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம், 1986 இல் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 30, 1986 இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நவம்பர் 1, 1986 இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது