தமிழகத்தில் ரூ.10,00,00,00,00,000 கோடியில் சாலை – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய சாலை திட்டங்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அதில், தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய சாலை திட்டங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சாலை திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3500 கிலோ மீட்டர் சாலை பணிகள் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மதுரையில் இருந்து கொல்லம் வரை பொருளாதார சாலை அமைக்கப்படும். பொருளாதார சாலைக்கான கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் என தெரிவித்தார்.
கன்னியாகுமரி- கேரளாவின் பல பகுதிகளில் இணைக்கும் நவீன வசதியுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.