தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.
இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியினை கண்டுகளிக்கும் விதமாகவும் பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.வாடிவாசலில் சீறிப்பாய 700 காளைகள் திமிளை காட்டிவாறு நிற்கின்றன இந்த காளைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவற்றிற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் அவர்களின் தலைமையிலான குழுவானது இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் காயங்களும் சில மாடுபிடிவீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சரியாக ஒரு மணி நேரத்திற்கு 70 காளைகள் களமிரக்கப்பட்டு வருகின்றது.மொத்தம் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது 5 சுற்று தொடங்கியுள்ளது.ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த சுற்றில் 75 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதில் 9 மாடுபிடிவீரர்கள் வராததால் 66 வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…