Today Live : புயல் பாதிப்பு.! திமுக மாநாடு, கலைஞர் 100 நிகழ்ச்சி தேதிகள் ஒத்திவைப்பு.!
இன்று தமிழகம் மற்றும் கர்நாடகாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே செங்கல்பட்டை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று காலை சரியாக 7.39 மணி அளவில் பூமிக்கடியில் 10கிமீ தொலைவில் இந்த நில அதிர்வு உருவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவானது.
அதே போல, கர்நாடக மாநிலம் விஜயபுரத்திலும் இதே போல நில அதிர்வு உணரப்பட்டது. அங்கு நில அதிர்வானது 3.1 என பதிவாகியுள்ளது. காலை 6.52 மணிக்கு இந்த லேசான நில அதிர்வு பதிவானது. இதனை தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலின் பதிவின்படி இது லேசான நில அதிர்வு. இதனை பெரும்பாலான பொதுமக்கள் உணர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.