₹1,298.20 கோடியில் 7 மாவட்டங்களில் 9 புதிய தொழிற்திட்டம் – முதல்வர் அடிக்கல்
வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
வேலைவாய்ப்பு குறித்து அரசு தகவல் வெளியிட்டுள்ள தகவல்:
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (23.10.2020) தலைமைச் செயலகத்தில் தொழில் துறை சார்பில் 1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்தார்.
அதன்படி 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குகின்ற வகையில் மேலும் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அரசு வெளியிட்டுள்ள தகவலில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்ய அம்மா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக அதில் தெரிவித்துள்ளது.