ஹைட்ரோ கார்பன் போராட்டம் ஒத்திவைப்பு..!!
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள், மீனவர் அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 9 செவ்வாயன்று நடக்கவிருந்த கோட்டாட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:
ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டுமெனக் கோரியும் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் மீனவர் அமைப்புகளின் சார்பில் அக்டோபர்-9 ஆம் தேதி நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் ஆகிய நான்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி திட்டமிட்ட இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
DINASUVADU