ஹெச.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை? கைது செய்திருந்தால் பெரியார் சிலை உடைத்திருக்க மாட்டார்கள் ?
பெரியார் சிலை உடைப்பு குறித்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாடிலன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழஎன்ற த்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் ஒட்டப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் சிஆர்பிஎப் வீரர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் குடிபோதையில் சிலையை உடைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில், சத்தீஸ்கரில் பணி புரிகிறார் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரியார் சிலை உடைப்பு குறித்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாடிலன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பெரியார் குறித்த கருத்துக்காக எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். எச்.ராஜாவை கைது செய்திருந்தால் பெரியார் சிலை உடைத்திருக்க மாட்டார்கள் என்றார். எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யாததால்தான் பெரியார் சிலை உடைப்புக்கு தைரியம் வந்துள்ளதாக கூறினார். இழிவான செயலைத் தூண்டி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரததில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.