தமிழகத்திற்கு மத்திய நிதி தொகுப்பிலிருந்து 38% வழங்கப்பட்டபோது, வரி வருவாய் குறைந்தாலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது 42 சதவீதமாக உயர்த்தினாலும் மாநிலத்திற்கு நிதி குறைந்துள்ளது.
இது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கின்ற செயலாக இருக்கின்றது. இதனை எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். தமிழகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் இந்த முடிவை மாற்ற மத்திய அரசுக்கு நெருக்கடி தருவோம்.
அதனால்தான் முதல்வர் மூத்த அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி இதுதொடர்பாக நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் நிதிக்குழு தலைவரை சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதிக்குழு தலைவரை சந்தித்து இதுகுறித்து அழுத்தம் கொடுக்க தமிழக நிதியமைச்சர் டெல்லி சென்றுள்ளார். நிதி தன்னாட்சியை பேணி பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி குற்றவாளிகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம். அப்போது, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். பேராசிரியை நிர்மலா தேவியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதுகுறித்து புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்கள் எந்த கட்சியில் இருந்தாலும், அவர்களின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலோ பேசக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையில் புகார் அளிக்கலாம், அல்லது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கலாம்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.