பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில் ,பெண்மையை இழிவுப்படுத்தும் எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியையே பாலியல் வலை வீசிய விவகாரம், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் புரோஹித் நடந்துகொண்ட விதம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் தெரிவித்த கருத்துகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. அவர்கள் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களால் கூட ஏற்க முடியாதவை. தனது செயலுக்காக ஆளுநர் மன்னிப்புக் கேட்டார். பெண்மையைப் போற்றும் தமிழகத்தில், பெண்கள் குறித்த எச்.ராஜா, எஸ்.வி.சேகரின் பார்வை எந்த அளவுக்கு கேவலமாக உள்ளன என்பதற்கு அவர்களின் இந்தக் கருத்துக்களே சாட்சி.