பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவுக்கு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கருப்புக் கொடி காட்டப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. இதில் பங்கேற்க ஹெச். ராஜா வந்தபோது, வழியில் ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி காட்டினர். இதனால் அதிருப்தியடைந்த ஹெச்.ராஜாவும், பா.ஜ.க.வினரும், கருப்புக்கொடி போராட்டத்துக்கு அனுமதி அளித்த போலீசாரைக் கண்டித்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க.வினர் திடீரென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் உருவபொம்மையை எரித்தனர். இதைத் தடுத்த போலீசார், ஒருவழியாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…