ஹெச்.ராஜாவின் பேச்சும், ஆளுநரின் செயல்பாடுகளும் காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நோக்கில் உள்ளது!மு.க.ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மை வெளிவரக்கூடாது என்பதற்காகவே கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஹெச்.ராஜாவின் அநாகரிகமான பேச்சும், ஆளுநரின் செயல்பாடுகளும் காவிரி பிரச்சனையை திசை திருப்பும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், கூடுதல் டி.ஜி.பி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டுள்ளது உண்மை வெளிவராமல் தடுக்கும் முயற்சி என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.